koneripuramNataraja

சோழ தேசமெங்கும் பல ஆலயங்களில் கலையம்சத்துடன்கூடிய தெய்வ விக்கிரகங் களைப் பிரதிஷ்டை செய்து வந்தார்கள் சக்கரவர்த்தி கண்டராதித்தரும் அவருடைய மனைவி செம்பியன்மாதேவியும். கோனேரிராஜபுரம் கோயிலிலும் ஸ்ரீநடராஜ சிற்பம் அமைக்க தீர்மானித்து, ஸ்தபதி ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்தனர்.

நாட்கள் நகர்ந்தன… எவ்வளவு முயன்றும் சிலை முழுமையடையாமல் பணி இழுத்துக் கொண்டே போக, செய்வதறியாமல் திகைத்தார் ஸ்தபதி. பணி தாமதமாவதை அறிந்த மன்னன், ஸ்தபதியை கடிந்துகொண்டான். ‘நாளைக்குள் சிலை தயாராகவில்லை எனில் தண்டனை நிச்சயம்’ என்று எச்சரித்தான். ஸ்தபதியும் அவருடைய மனைவியும் கவலையில் ஆழ்ந்தனர். அப்போது, அவர்களது இல்லத்தைத் தேடி வந்த வயதான கணவனும் மனைவியும் ”உண்ணவோ பருகவோ ஏதேனும் கிடைக்குமா” என்று கேட்டனர். ஸ்தபதியோ விரக்தியுடன், ”காய்ச்சி உருக்கிய உலோகக் குழம்பைத் தவிர வேறு எதுவும் இல்லை” என்றான். அத்துடன் தனது நிலையையும் விவரித்தான். இதைக்கேட்ட அந்தத் தம்பதி, சிலை வடிக்க வைத்திருந்த உலோகக் குழம்பை அப்படியே எடுத்துப் பருகினர். மறுகணம்… அங்கே இரண்டு விக்கிரகங்களாக மாறினர். ஆமாம்! ஸ்தபதி எதிர்பார்த்தது போன்றே அழகிய விக்கிரகங்களாக காட்சி தந்தனர். வந்தது இறைத் தம்பதியே என்பதை அறிந்து சிலிர்த்தான் ஸ்தபதி.

விக்கிரகங்கள் தயார் என்பதை அறிந்த மன்னன், அவற்றைக் காண ஓடோடி வந்தான். அவனிடம், விக்கிரகங்கள் சுயம்புவாகத் தோன்றியதை ஸ்தபதி விவரிக்க… அதை நம்பாத மன்னன், உளியால் விக்கிரகத்தைத் தட்டினான். மறுகணம் விக்கிரகத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. மன்னனின் கை-கால்கள் செயலிழந்தன. தவறுணர்ந்த மன்னன், ஆலயம் சென்று வலம் வந்து இறைவனை வேண்ட, அவனது அங்கங்கள் குணம் பெற்றன. கோனேரிராஜபுரம் ஸ்ரீநடராஜர் விக்கிரகம் உருவானது இப்படித்தான்.

 

Sakti Vikatan June26,2010

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s